சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்: இந்திரா பானர்ஜி உறுதி

சென்னை:

மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயதான மாற்றுத்திற னாளி சிறுமியை, அந்த குடியிருப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் செக்யூரிட்டி உள்பட பலர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இந்த தொடர்பாக குற்றச்சாட்டில் 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள்..

இந்த நிலையில், சிறுமி பலாத்கார வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார்.

முறையிட்டதை நிராகரித்த தலைமை நீதிபதி, ஏற்கெனவே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விளக்கமளித்தார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைக்க வேண்டிய நடவடிக்கைகளை தொடங்க தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

சிறுமிக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொல்லை குறித்து காவல்துறையினர் குழந்தைகள் நல குழுமத்திடம் தெரிவிக்கவில்லை என மாற்றம் இந்தியா என்ற அமைப்பைச் சேர்ந்த பாடம் நாராயணன் என்பவர் நீதிபதியிடம் முறையிட்டார்.

இதையடுத்து விளக்கமளித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்த ஒரே ஒரு வழக்கு மட்டு சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேருக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதியளித்துள்ளது.

மேலும், காவல்துறையினர் இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்துள்ளதால் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடியாது எனவும் விளக்கம் அளித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி