பாலியல் வழக்கு: உச்சநீதி மன்றத்தில் சசிகலாபுஷ்பா மனு!

புதுடெல்லி:

பாலியல் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு சம்மன் அனுப்பியதற்கு தடை கோரி சசிகலாபுஷ்பா டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

sasi

சசிகலா புஷ்பா வீட்டில்ப ணியாற்றிய பணிப்பெண்கள்  பானுமதி,  ஜான்சிராணி ஆகியோர் கொடுத்த புகாரில்,  சசிகலாபுஷ்பா, அவரது  கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் பாலியல்  ரீதியாக கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தனர்.

இந்த வழக்கில்போலீஸ் கைதில் இருந்து தப்பிக்க, மதுரை ஐகோர்ட்டு கிளையில் முன்ஜாமின் கேட்டு அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.

விசாரணையில், மனுவில் சசிகலாபுஷ்பாவின்  ஒரிஜினல் கையெழுத்து இல்லை என அரசு வழக்கறிஞர் சந்தேகம் கிளப்பியதால், வரும் 29ந்தேதி  நேரில் ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து,  மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மூவர் சார்பில் புதன்கிழமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனுவில் “உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் தாக்கல் செய்த போது நாங்கள் இந்தியாவில்தான் இருந்தோம். வெளிநாடு செல்லவில்லை. எனவே, நேரில் ஆஜராக   மதுரை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று மூவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த மனுமீதான விசாரணை, உச்ச நீதி மன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிகிறது.