ஐ.ஜி. மீது பாலியல் புகார் கூறிய பெண் அதிகாரி இடமாற்றம்

சென்னை:

மிழக காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஐஜி மீதான பாலியல் புகார் விவகாரம்.  இந்த விவகாரத்தில் புகார் கொடுத்த பெண் காவல்துறைறை அதிகாரி வேறு துறைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள்  அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையிலேயே பெண் போலீஸ் அதிகாரி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே துறையில் பணியாற்றி வந்த காவல்துறையை சேர்ந்த ஐஜி மீது, அவருக்கு கீழ் பணியாற்றி வந்த காவல்துறை பெண் சூப்பிரண்டு, தன்னை ஐஜி கட்டியணைத்தார் என்றும், தனது  செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பி வருவதாகவும், குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இது விசாரணை நடத்த  விசாகா கமிட்டி  உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐஜி மீது பாலியல்  புகார் கூறிய பெண் அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது பணிபுரிந்த இடத்தில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரது பணி மாற்றம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக, அவருடன் சேர்த்தும் மொத்தம் 16 அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக மாற்றி உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது