என் மீதான புகார் நீதிக்கு மிரட்டல் : தலைமை நீதிபதை ரஞ்சன் கோகாய்

டில்லி

ன் மீது எழுப்பப்பட்டுள்ள பொய் புகார் நீதிக்கு மிரட்டலை விடுப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி வகித்து வருகிறார். அவர் மீது அவருடைய முன்னாள் அலுவலக இடைநிலை ஊழியர் பாலியல் புகார் அளித்துள்ளார். சுமார் 35 வயதாகும் அந்த பெண் நேற்று அளித்த புகாரில் தம்மிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பாலியல் அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் உச்சநீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு அனுப்பி உள்ள அந்த புகாரில் தன்னை அவருடைய பாலியல் இச்சைக்கு உட்படாததால் பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் மற்றும் தனது குடும்பத்தினரை காவல்துறையினர் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கியதாகவும் விரிவாக தெரிவித்திருந்தார்.

இது குறித்து தலைமை நீதிபதி அடங்கிய ஒரு சிறப்பு உச்சநீதிமன்ற அமர்வு விரைவில் சிறப்பு விசாரணை நடத்த உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் இது குறித்த உண்மைகளை இந்த விவகாரத்தின் நிலையைக் கருதி பொறுப்புடன் வெளியிட வேண்டும் என ஊடகவியலாளர்களை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த புகார் குறித்துதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ”தற்போது நீதியின் சுதந்திரத் தன்மைக்கு மிரட்டல் எழுந்துள்ளது. இவ்வாறான பொய்ப் புகார்களால் நீதி கடுமையாக மிரட்டப்படுகிறது.. இது நம்ப முடியாத ஒரு புகார் ஆகும். என்னைப் பற்றி இத்தனை கீழ்த்தரமான புகார்கள் எழுப்பப்படும் என்பதை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.