அமைச்சர் ஜெயக்குமார் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

சென்னை:

மிழக அமைச்சர் டி. ஜெயக்குமார் மீதான பாலியல் புகார் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீ டூ புகார்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் மீது பெண் ஒருவர் கூறும் பாலியல் புகார் தொடர்பான ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழக மார்க்சிய கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீதுபாலியல் ரீதியான ஒரு குற்றச்சாட்டு சமூகவலைத்தளத்தில் பரவலாக முன் வந்துள்ளது. ஒருகுழந்தையின் பிறப்பு சான்றிதழும் தந்தை பெயராக டி.ஜெயக்குமார் என்பதை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளது.

உதவி கேட்டு சென்றபெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததாகவும், அதன் தொடர்ச்சியாக அப்பெண் கருவுற்றுகுழந்தை பெற்றதாகவும், இதற்கு ஆதாரங்கள்உள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.

இது அவதூறு என அமைச்சர் கூறினாலும்வெகுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை இது எழுப்புகிறது. நாடு முழுவதும் அரசியல்மற்றும் அதிகார செல்வாக்கு உள்ளவர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்கள்முன்வந்துள்ள நிலையில் இப்புகார் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சுட்டிக்காட்டவிரும்புகிறோம்.

முறையான விசாரணையின் மூலமாகவே உண்மையை கண்டறிய முடியும். பாலியல் வல்லுறவு என்பது ஒரு கடுமையான கிரிமினல்குற்றம் என்கிற அடிப்படையில் உரிய முக்கியத்துவத்தோடு இப்பிரச்சனை அணுகப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் அவர் குடும்பத்திற்கும் முழுமையான பாதுகாப்புஅளிப்பதோடு, முறையான விசாரணையைதமிழக அரசு நடத்திடவும், விசாரணை முடிவின்அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.