வைரமுத்து மீதான பாலியல் புகார்: அரசியலாக்கும் முயற்சியில் பாஜக

சென்னை:

விஞர் வைரமுத்து மீதான பாலியல் விவகாரம் தமிழக திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது அதை அரசியலாகி வருகிறது.

இந்த விவகாரத்தில்  பாடகி சின்மயிக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழக பாஜக தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா போன்றோர் களமிறங்கி உள்ளனர்.

#MeToo என்ற ஹாஸ்டேக்கில் வெளியாகி வரும் பாலியல் புகார்கள் குறித்த பதிவுகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. மத்திய அமைச்சர் அக்பர் மீது, பாலிவுட் நடிகர் நானே படேகர், விளையாட்டு வீராங்கனைகள் என பல சர்ச்சைகளை தொடர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் பிரபலமான கவிஞர் வைரமுத்து மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

பாடகி சின்மயி வைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல்களை தெரிவிக்கப்போவதாக பதி விட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வைரமுத்து, வித்தியாசமான முறையில் விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால், அது பொய் என்று சின்மயி பதில் அளித்திருந்தார். இந்த விவகாரங்கள் திரையுலகில் புயலை கிளப்பி வரும் நிலையில், சர்ச்சைகள் தொடர்பாக பாடகி சின்மயிக்கு ஆதரவாக பாஜக தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜனும், எச்.ராஜாவும் களமிறங்க உள்ளனர்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில்,

அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்?? எனவும் பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது, நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது என்று  பதிவிட்டு உள்ளார்.

அதுபோல பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா,

Me too தொடர்பாக எம்.ஜே.அக்பர் பற்றி கால் பக்க கட்டுரை எழுதிய இமாம் அலிக்கு முழுபக்க விளம்பரம் தந்த பத்திரிகை சின்மயி புகார் பற்றி மௌனம் ஏன். என்று பதிவிட்டு உள்ளார்.

ஏற்கனவே ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், தற்போது சின்மயி விவகாரத்தை பாஜக கையில் எடுத்து வைரமுத்துவை கட்டம் கட்டுவதாக தெரிகிறது..