Random image

பிரபல கோலிவுட் இயக்குனர் மீது பாலியல் புகார் : திடுக்கிடும் செய்தி

மும்பை

ஞ்சய் தத் வாழக்கைக் கதையான சஞ்சு உள்ளிட்ட பல திரைப்படங்களை பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மீது அவர் பெண் உதவியாளர் பாலியல் புகார் கூறி உள்ளார்

சஞ்சய் தத் நடித்த முன்னாபாய் வரிசைப் படங்கள், அமிர்கான் நடித்த 3 இடியட்ஸ் மற்றும் பிகே ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி.   இவர் சஞ்சய்தத்தின் வாழ்க்கைக் கதையான சஞ்சு திரைப்படத்தை தயாரித்து இயக்கி உள்ளார்.  சஞ்சு திரைப்படத்தின் மற்றொரு தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா ஆவார்.

சஞ்சு திரைப்படத்தில் ராஜ்குமாருக்கு உதவியாளராக பணியாற்றிய பெண் ஒருவர் ராஜ்குமார் மீது அப்படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான விது வினோத் சோப்ராவுக்கு ஈ மெயில் மூலம் பாலியல் புகார் அளித்துள்ளார்.   அந்த புகாரில் அவர், “கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்கள் நான் ராஜ்குமார் ஹிரானியிடம் உத்வியாளராக இருந்தேன்.

அப்போது அவர் என்னை பலமுறை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  நான் அவரிடம் மிகவும் பெரிய மனிதரான அவர் ஒரு சாதாரண  பெண்ணான என்னிடம் இவ்வாறு நடந்துக் கொள்வது தவறு என கூறினேன்.   ஆயினும் அவர் என்னிடம் பலமுறை பாலியல் சீண்டலில் தொடர்ந்து ஈடுபட்டார்.   அவரை ஒரு தகப்பன் நிலையில் வைத்து  பார்த்த எனக்கு இச்செயல்கள் மிகவும் அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்த செயல்களால் கடந்த ஆறு மாதங்களாக நான் மனதளிவில் மிகவும் பாதிக்க பட்டுள்ளேன்.  என்னை விட சுமார் 30 வருடங்கள் மூத்தவரான அவருடைய செய்கையால் நான் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளேன்.   உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள எனது தந்தையை நான் கவனித்து வருவதால் நான் உடனடியாக பணியை விட்டு செல்ல முடியாத நிலையில் இருந்தேன்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு ராஜ்குமார் ஹிரானி தனது வழக்கறிஞர் ஆனந்த் தேசாய் மூலம் பதில் அளித்துள்ளார்.  ஆனந்த் தேசாய், “எனது கட்சிக்காரர் ராஜ்குமார் ஹிரானி குற்றமற்றவர்.   அவருடைய நற்பெயரைக் கெடுக்கவே அந்தப் பெண் இவ்வாறு புகார் அளித்துள்ளார்.   இது பொய்யான, தவறான திட்டமிடப்பட்ட புகார் ஆகும்” என தனது பதிலில் தெரிவித்துள்ளார்.