மதுரை,

திமுக ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா கடந்த ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை தாக்கியதை தொடர்ந்து  ஜெயலலிதா சசிகலா புஷ்பாவை கண்டித்தார்.

இதையடுத்து, ராஜ்யசபாவில் ஜெயலலிதா என்னை தாக்கினார் என குற்றம்சாட்டினார். அதைத்தொடர்ந்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

தொடர்ந்து அவர்மீது பல்வேறு வழக்குகள் பாயத்தொடங்கின. அவரது வீட்டு பணிப்பெண் ஜான்சி ராணி, பானுமதி ஆகியோர் சசிகலாவின் கணவர் திலகன் மற்றும் அவரது மகன் ஆகியோர் தனக்கு  பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் கொடுத்திருந்தார்.

இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்களையில் மனு தாக்கல் செய்தனர். கையெழுத்து போலியானது என கூறப்பட்டதை அடுத்து சசிகலாபுஷ்பா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து, சசிகலாபுஷ்பா டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமின் பெற்றார். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆஜரானார்.

அதைத்தொடர்ந்து வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ந்தேதி உடல் நலமில்லாமல் மரணம் அடைந்தார்.

அதைத்தொடர்ந்து அதிமுக பிளவு பட்டது. இந்நிலையில், சசிகலா குடும்பத்தினர்மீது பாலியல் புகார் கொடுத்த அவரது வீட்டு பணிப்பெண்கள் புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.