பாலியல் வழக்கு: மத்திய முன்னாள் அமைச்சர் எம்.ஜே. அக்பருக்காக 97 வழக்கறிஞர்கள் வாதாடுகிறார்கள்?

ன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ள பெண் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள மத்திய முன்னாள் அமைச்சர் அக்பருக்காக 97 வழக்கறிஞர்கள் வாதாடுவதற்காக வக்காலத்து பதிவு செய்துள்ளனர்.

பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாகச் சீண்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளானதை #மீ டூ ஹேஷ்டேக் மூலம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில், 40 வருடங்களுக்கு மேலாக பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் புகார்களைத் தெரிவித்துள்ளனர். அதில் மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ஸ் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப், உள்ளிட்ட பலர் உள்ளனர்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அக்பர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று வலியுறுத்தின.

இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்று மறுப்புத் தெரிவித்த அக்பர்,  , தன் மீதான இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வழக்கறிஞர்கள் கையாள்வார்கள் என்றும்  தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஜே.அக்பரின் வழக்கறிஞர் சந்தீப் கபூர் தெரிவித்தார்.

பாட்டியாலா தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதில் எம். ஜே. அக்பர் தரப்பில் வாதாடுவதற்காக 97 வழக்குரைஞர்கள் வக்காலத்து பதிவு செய்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட வழக்குகாக இத்தனை வழக்குரைஞர்கள் வாதாட பதிவு செய்திருப்பது நீதிமன்ற வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.