பலாத்கார வழக்கில் சிக்கிய பிரபல நடிகர் திலீப்புக்கு இன்னொரு சிக்கல்

திலீப் – மஞ்சுவாரியர்

 

டிகை பாவனா பலாத்கார வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், சட்டத்துக்குப் புறம்பாக நடிகை மஞ்சுவாரியரை திருமணம் செய்துகொண்டதாக புது புகார் எழுந்துள்ளது.

 

1990களில் மலையாள திரைப்படங்களில்  நடிக்கத் தொடங்கினார். நடிகை , மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு நடிகை காவ்யா மாதவனை காதலிக்க ஆரம்பித்தார். இதையடுத்து திலீப்பும் அவரது மனைவி மஞ்சுவாரியரும் விவாகத்து பெற்றனர். பிறகு காவ்யா மாதவனை திலீப் திருமணம் செய்துகொண்டார்.

 

இந்த நிலையில்தான் நடிகை பாவனா பலாத்கார வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார் திலீப்.

இந்த விவகாரத்தை விசாரித்து வரும் காவல்துறையினருக்கு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. அதாவது மஞ்சுவாரியரை திருணம் செய்துகொள்ளும் முன்பே, திலீப் தனது உறவுக்காரப் பெண் ஒருவரை முறைப்படி திருமணம் செய்தார். அப்போது அவர் திரைத்துறைக்கு வந்திருக்கவில்லை.

 

திரைத்துறைக்கு வந்த பிறகு தனது முதல் மனைவி மற்றும் குடும்பத்தை மறைத்தே வந்தார். இந்த நிலையில்தான் மஞ்சு வாரியரை காதலித்து திருமணமும் செய்துகொண்டிருக்கிறார்.

 

 

திலீப்பின் முதல் மனைவி, தற்போது வளைகுடா நாட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவருடைய பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பெற்றிருக்கும் கேரள காவல்துறையினர் அவரை கேரளாவுக்கு வரச் சொல்லி தகவல் அனுப்பியிருக்கிறார்கள்.

ஆக திலீப் பற்றிய புதிய பூகம்பம் ஒன்று இப்போது கிளம்பியிருக்கிறது.

You may have missed