சென்னை:

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையான கோசா மருத்துவமனையில், மருத்துவ மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக மருத்துவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

உலகின் பெண் மருத்துவரால் பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் மருத்துவமனை என்று சிறப்புப் பெற்ற அந்த மருத்துவமனைதான்  தற்போது கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை (கோசா மருத்துவமனை) என்று அழைக்கப்படுகிறது. இது திருவல்லிக்கேணியில் உள்ளது.

பெண்களின் குழந்தைபேறுக்கு பிரசித்தி பெற்ற மருத்துவமனையான இதில், மேற்படிப்பு படித்து வரும் மாணவிகளிடம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.  3 மருத்துவ மாணவிகளை மிரட்டி பாலியல் அத்துமீறல் நடைபெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அருப்புக்கோட்டை நிர்மலாதேவி விவகாரத்தில் பேராசிரியர்கள் மீதான நம்பிக்கை பொய்த்துபோன நிலையில், மருத்துவ மாணவிகளிம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் வெளியே தெரிந்தால்அரசு மீதான மரியாதை மேலும் குறைந்துவிடும் என்பதால், இந்த தகவலை வெளியே தெரியாமல் மறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.