லிப்ட்டில் மாணவிக்கு பாலியல் தொல்லை: எஸ்ஆர்எம் ஊழியர் கைது

சென்னை:

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு அதே பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் லிப்டில் சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று மாலை முதல் தொடர் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக  ஊழியர் அர்ஜூனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அர்ஜுன்

சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ளது பிரபலமான எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம். இங்கு அனைத்து வகையான கல்விகளும் இங்கு போதிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பணக்கார மாணவர்கள் ஏராளமானோர் இங்க கல்வி பயின்று வருகின்றனர்.

இதற்கு காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில், இருபாலருக்கும் தனித்தனி விடுதிகள்,  ஏசி மற்றும் அனைத்து விதமான வசதிகளுடன் தனித்தனி அறைகள் போன்ற வசதிகள் இந்த பல்கலைக்கழகத்தில் வதுழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மற்ற மாநில பெருந்தலைகளின் பிள்ளைகள் இந்த கல்லூரிக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் கல்லூரி லிப்டில் வந்தார். அப்போது அவருடன் கல்லூரி கேன்டீனில் பணியாற்றும் ஊழியர் அர்ஜுனும் என்பவரும் வந்துள்ளார். லிப்டு பயணத்தின்போது, அர்ஜுனன் அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடபட்டுள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, கூச்சலிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து லிப்ட் நின்றதும்  அர்ஜுனன் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து விடுதி வார்டனி டம் அந்த மாணவி புகார் கொடுத்தார். அதற்கு வார்டனோ ஒழுக்கமான உடைகளை அணியாததால்தான் அந்த ஊழியர் அப்படி நடந்து கொண்டதாக பதிலை தெரிவித்தார்.

இது மாணவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.  பாலியல் சேட்டை செய்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு போராட்டத்தில் குதித்தனர். அதையடுத்து,  சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த மாணவி, அந்த ஊழியரை அடையாளம் காட்டினார். எனினும் இந்த விவகாரத்தில் மாணவியை அமைதி காக்குமாறு நிர்வாகம் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது.

மாணவர்கள் போராட்டம்

ஆனால், மாணவர்கள் எதற்கும் பணியால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக  கல்லூரி வளாகத்திற்குள் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட அர்ஜுன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.