தமிழக காவல்துறையில் பாலியல் தொல்லை: ஐஜி ஒருவர் மீது பெண் எஸ்பி பகீர் புகார்

சென்னை:

மிழக காவல்துறையை சேர்ந்த ஐஜி ஒருவர் தன்னை கட்டியணைக்க முயற்சித்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் அதிர்ச்சி புகார் கூறி உள்ளார். இது காவல்துறையில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள்  அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்களை  கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் மற்றும் நீதிமன்றங்களும் பல்வேறு கடுமையான உத்தரவுகளை அமல்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையிலேயே, கருப்பு ஆடுகள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெண் எஸ்.பி. ஒருவர், தன்னை ஆலோசனை கூட்டத்துக்கு வரவழைத்த ஐஜி, கட்டி அணைக்க முயற்சித்தார் என்று அதிடியாக புகார் கூறி உள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வரும் அந்த பெண் எஸ்பி, தன்னிடம் அலுவலல் ரீதியாக ஆலோசனை நடத்த வேண்டும் அழைப்பு விடுத்ததாகவும், அப்போது அவரது அறைக்கு சென்ற என்னை, அந்த ஐஜி கட்டியணைக்க முயற்சி செய்ததாகவும், தான் அவரை தள்ளி விட்டுவிட்டு அழுதுகொண்டே வெளியே வந்துவிட்டதாகவும் கூறி உள்ளார். இதையடுத்து மன உளைச்சல் காரணமாக ஒருவாரம் விடுமுறை போட்டுவிட்டு வீட்டிலேய முடங்கி உள்ளார்.

இந்த நிலையில், தற்போது அந்த பெண் எஸ்.பி., தன்னிடம் தவறாக முயற்சி செய்த ஐ.ஜி. மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் எஸ்.பி. கொடுத்துள்ள பாலியல் புகார் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த தமிழ்நாடு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் குழு அமைத்துள்ளதாகவும், அந்த குழுவில்  கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், சு.அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி ஆகியோர் இடம்பெற்றிருப்ப தாகவும் கூறப்படுகிறது.

பெண் டிஎஸ்பியின் புகார் குறித்து, பெண்கள் மீது பாலியல் தொல்லை தடுப்புச் சட்டப்படி விசாரண நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயிரை காக்க வேண்டிய வேலியே… பயிரை மேய்வதுபோல… மக்களை காக்க வேண்டிய காவல்துறையிலேயே இது போன்ற சம்பவம் அரங்கேறி இருப்பது பரபரப்பையும், தமிழக காவல்துறையின் மீதான மதிப்பையும்,  நம்பிக்கையையும் குறைப்பதாகவே  உள்ளது.

தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களுக்கே மதிப்புகொடுக்க தெரியாத இவர்கள் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்குவார்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.