ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: மனோன்மணியம் பல்கலை. பேராசியர் பணியிடை நீக்கம்

நெல்லை:

ராய்ச்சி படிப்பு படித்துவம் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், மனோன்மணியம் பல்கலைக்கழக பேராசியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சமீப காலமாக நாடு முழுவதும் பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகிறார் கள். இதை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள நிலையில், பாலியல் புகார்கள் தொடர்ந்துகொண்டேதான் வருகின்றன.

இந்த நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்துவரும் மாணவ ஒருவர், பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், பாலியல் தொல்லை கொடுத்த மூத்த பேராசியர் மீது விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது.

விசாரணையின்போது, பேராசிரியர்மீதான புகாரில் உண்மை இருப்பதாக தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேராசிரியர் மருத்துவ விடுப்பில் செல்ல அறிவுறுத்தப் பட்டதாக கூறப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பேராசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து, மூத்த பேராசிரியர் கோவிந்தராஜை பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் பணியிடை நீக்கி உத்தரவிட்டு உள்ளார்.