பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடுட்டால் வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து: அரியானா அரசு அதிரடி

சண்டிகர்:

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாகன ஓட்டுனநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், முதியோர்களாக இருந்தால் அவர்களது பென்ஷன் ரத்து செய்யப்படும் என்றும் அரியானா முதல்வர் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.

பெண்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், அரியானா மாநிலத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார்,  ”மாநிலத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு வாகன உரிமம், துப்பாக்கி உரிமம், வயதானவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரத்து செய்யப்படும்.

அவர்களுக்கு ரேசன் உரிமம் மட்டும் வழங்கப்படும். நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் வரையில் இத்திட்டம் இடைநீக்கத்தில் இருக்கும்.

பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு துவங்கியுள்ள இத்திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதியான சுதந்திர தினம் அல்லது ஆகஸ்ட் 26-ம் தேதி ரக்‌ஷா பந்தன் அன்று  அமல்படுத்தப்படும் என்று கூறி உள்ளார்.

மேலுகளுக்கு எதிரான வழக்குகள் தடையின்றி விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பாலியல் குற்ற வழக்குகளை 1 மாதத்திற்குள், ஈவ்டீசிங் போன்ற வழக்கு விசாரணையை 15 நாட்களில் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறினார். இதற்காக 6 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்த முதல்வர், இதுகுறித்து, பஞ்சாப் மற்றும் அரியானா  உயர்நீதிமன்ற நீதிபதிகளை விரைவில் சந்தித்து பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி