பலாத்கார குற்றங்கள் குறைய சுய இன்பம் செய்யுங்கள்!: திரைப்பட இயக்குநர் சந்தோஷ்

நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்தப் படத்தின் டிரெயிலர்   ஒரு மாதத்திற்கு முன்பாக வெளியானபோதே இது ஒருவகையான “போர்ன் மூவி” என்பது தெரிந்துவிட்டது.

இது மாதிரியான ஆபாச படங்கள் தமிழ்ச் சினிமாவுலகத்திற்குத் தேவையா என்று கேட்கப்பட்ட தற்கு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும்,  இயக்குநர் சந்தோஷூம் மிக ‘இது அடல்ட்ஸ் மூவி. ஏ சர்டிபிகேட் படம். குடும்பத்தோட வராதீங்க. தனித்தனியா வந்து பாருங்க’ என்று  அலட்சியமாக பதில் அளித்தார்கள்.

நேற்றைய சந்திப்பில் , “நாடு முழுவதும் இப்போது பாலியல் பலாத்காரங்கள்.. பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், இது போன்ற ஆபாச படங்கள் தேவையா” என்று கேட்கப்பட்டது.

இதற்கு படத்தின் இயக்குநர் சந்தோஷ் “அதான் படத்துலேயே சொல்லியிருக்கோமே ஸார்.. ‘சொந்தக் கைகளால் சொர்க்கம் காண்போம்’ன்னு..” என்றார் கிண்டலாக சிரித்தபடியே.

அதாவது, “ஆண்கள் பாலியல் குற்றங்கள் செய்ய நினைக்கும் நேரத்தில் சுயஇன்பம் செய்தால், அக் குற்றங்களை தவிர்த்துவிடலாம்…” என்கிறார்.

மே 4ம் தேதி வெளியாகிறது “இருட்டு அறையில் முரட்டுக்குத்து”. இன்னும் என்னென்ன அதிர்ச்சிகள் இருக்கிறதோ படத்தில்!

கலாச்சார காவலர்கள், பெண்கள் அமைப்பினர்கள் அலர்ட்!