சிலி:

லகம் முழுவதும் கத்தோலிக்க மதத்தை சேர்ந்த பாதிரியர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு போப் கடும் கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிலி நாட்டிலும், கத்தோலிக்க பாதிரியார்கள்மீதும், பிஷப்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது.

சிலியில் உள்ள  ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் பாலியல் குற்றங்கள் நடைபெற்றதாக பாதிரியார் ஒருவர் புகார் கூறினார்.  அதைத்தொடர்ந்து ஆதாரங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. பாலியல் குற்றங்களை மறைத்ததாகவும், பொதுமக்களை குற்றங்களிலிருந்து பாதுகாக்க தவறியதாகவும் வாடிகன் நகருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதைப்பற்றிய விசாரணை போப் பிரான்சிஸ் தலைமையில் வாடிகன் நகரில் நடைபெற்றது. இதில் சிலை நாட்டை சேர்ந்த 34 பிஷப்புகளும் கலந்துகொண்டனர்.

விசாரணையை தொடர்ந்து அந்த  34 பிஷப்புகளும்  தங்களின் ராஜினாமா கடிதங்களை போப்பிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாத உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.