கடலூர்:

டலூர் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமிகளை கடத்திச்சென்று மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பபட்டவர்களுக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பாதிரியார் அருள்தாசுக்கு  30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடலூர் அருகே உள்ள  திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  உயர்நிலைக் கல்வி  படித்து வந்த 2 சிறுமிகள் திடீரென மாயமான நிலையில்  வடலூரில் உள்ள சதீஷ்குமார் என்பவர்  வீட்டில் இருந்து  மீட்கப்பட்டனர். விசாரணையில், அவர்களை கடத்திச்சென்று பல்வேறு நபரிடம் விலைக்கு விற்கப்பட்டு  கட்டாயப்படுத்தி  பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாக கூறப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் கிறிஸ்தவ பாதிரியார் உள்பட 8 ஆண் மற்றும் 8 பெண்கள் உள்பட 16 மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர்  கைது செய்தனர். தொடர்ந்த இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 4ந்தேதி கடலூர் மகளிர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 16 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி,  பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பாதிரியார் அருள்தாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும்,5 லட்சம் ரூபாய் அபராதம் வித்தது நீதிமன்றம், அபராதம்  செலுத்த தவறினால் கூடுதலாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை கழிக்க வேண்டும் என்றும் மகளீர் நீதிமன்ற நீதிபதி அதிரயாக உத்தரவிட்டு உள்ளது.

மேலும், மற்றவர்களுக்னான  தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது பாத்திமா. கிரிஜா  ராதா ஆகியோரும் பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

மற்றவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டு வருகிறது.