செஷெல்ஸ் அதிபர் இந்தியா வருகை

காந்திநகர்:

செஷெல்ஸ் நாட்டு அதிபர் டேனி பவுரி 6 நாள் அரசு முறை பயணமாக இன்று மாலை குஜராத் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்துக்கு மாலை வந்து சேர்ந்தார்.

திங்கட்கிழமை அன்று பிரதமர் மோடியை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். குஜராத், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.