‘சங்கி’ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஷாருக்கான்…..!

ஷாருக்கானின் அடுத்த படம் அட்லீ இயக்குகிறார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ளது.

இப்படத்திற்கு ‘சங்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பறியும் போலீஸ் மற்றும் வில்லன் என இரண்டு வேடங்களில் நடிகர் ஷாருக்கான் மிரட்ட உள்ளாராம்.