தளபதி 63 படத்திற்காக வில்லனாக மாறும் ஷாருக் கான் …!

விஜய் & அட்லி மூன்றாவதாக கூட்டணி அமைந்து இணைந்திருக்கும் படம் விஜய்யின் 63வது படமாகும். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டி சமையத்தில் அட்லீ மற்றும் ஷாருக் இருவரும் ஒன்றாக அமர்ந்து மேட்ச் பார்த்தது , அட்லீயின் தளபதி63 படத்தில் ஒரு சிறிய ரோலில் ஷாருக் நடிக்கிறார என உறுதி செய்வதாக இருந்தது.

இந்நிலையில் தளபதி 63ல் ஷாருக் ரோல் பற்றி பாலிவுட் மீடியாகளில் செய்தி வெளியாகியுள்ளது. அதில் ஷாருக் வில்லன் ரோலில் கிளைமாக்ஸில் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே வருவாராம்.

இரண்டு சினிமா துறையில் டாப் ஹீரோக்கள் உள்ளவர்கள் இப்படி ஹீரோ-வில்லனாக நடிப்பது சற்றும் எதிர்பார்க்காத ஒன்று என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.