பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தமிழில் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதாவை கைப்பற்றி உள்ளார். அதை அவர் இந்தியில் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

நடிகர் மாதவன், விஜய்சேதுபதி நடித்த  ‘விக்ரம் வேதா’ படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அனைத்து தரப்பினருக்கும் பிடித்த மற்றும் லாபம் கொடுத்த படம் என்றால் விக்ரம்வேதா தான்.

இப்படத்தை தெலுங்கு, ஹிந்தி என ரீமேக் செய்ய பலர் தயாரிப்பாளரிடம் அலைமோதினர். இந்நிலையில் விக்ரம்வேதாவை இந்தியில் தயாரிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் கைப்பற்றியுள்ளார்.

விக்ரம்வேதா பாலிவுட் ரீமேக்கை ஷாருக்கான் தயாரிக்கவிருப்பது உண்மை என்றாலும், இந்த படத்தில் அவர் மாதவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா அல்லது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்கிரா என்ற தகவல்கள் இதுவரை  வெளி வரவில்லை.