வைரலாகும் ஷாருக் கானின் விழிப்புணர்வு வீடியோ….!

உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா வைரஸ் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்தியாவிலும் 15 மாநிலங்கள்வரை முழுவதும் முடக்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரையில், கொரோனாவால் 415 பேர்வரை பாதித்துள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தனது படங்களான ‘சென்னை எக்ஸ்ப்ரஸ்’, ‘கல் ஹோ நா ஹோ’ ஆகிய பல படங்களின் காட்சிகளை கோர்த்து, கரோனா வைரஸ் அறிகுறிகளான சளி, காய்ச்சல், அதீத சோர்வு, தொண்டை வலி ஆகியவற்றை பற்றியும் அவற்றை உணர்பவர்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.