அமித் ஷாவை நாளை சந்திக்க உள்ளோம்: டெல்லி ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் தகவல்

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாளை சந்திக்க இருப்பதாக டெல்லி ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியின் ஷாஹீன்பாகில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்கள் போராட்டம், 50 நாட்களை கடந்துள்ளது.

போராட்டம் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை திருத்த சட்டத்தின் எந்தப் பிரிவு இந்தியாவுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானது என்று கருதுகிறார்கள்?

நான் அனைவரையும் சந்திக்க தயாராக உள்ளேன். ஆனால் விவாதிக்க யாரும் முன்வரவில்லை என்றார்.

இந் நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாளை சந்திக்க உள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர்கள் இவ்வாறு கூறி இருக்கின்றனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது: உள்துறை அமைச்சர் எங்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார். ஆனால், அவரை சந்திக்க அலுவல் பூர்வமான முன் அனுமதி எதுவும் பெறவில்லை.

ஞாயிறு மதியம் 2 மணிக்கு ஷாஹீன்பாகில் இருந்து கிளம்பி அமித் ஷாவின் வீட்டுக்கு ஊர்வலமாக சென்று அவரை சந்திப்போம். அமித் ஷாவும்,  மோடியும் இங்கு வர வேண்டும் என்று ஆரம்பம் முதலே நாங்கள் கோரி வருகிறோம்.

யாருக்கெல்லாம் இந்த சட்டம் குறித்து பிரச்சனை உள்ளதோ அவர்கள் எங்களை வந்து சந்திக்கலாம் என்று அமித் ஷா கூறியுள்ளார். எங்களுக்கு பிரச்சனை உள்ளது. அதனால் நாங்கள் செல்கிறோம் என்று கூறினர்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை அமித் ஷாவுக்கு எந்த திட்டமிட்ட சந்திப்பும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: amit sha house, CAA Protest, citizenship act, Shaheen Bagh, அமித் ஷா இல்லம், குடியுரிமை சட்டம், சிஏஏ போராட்டம், ஷாகீன் பாக்
-=-