டெல்லி: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்துக்கு பணம் பெறுகின்றனர் என்று அவதூறு பேசிய பாஜக நிர்வாகிக்கு பெண் ஒருவர் 1 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் என்ற இடத்தில் 36 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டம் பற்றி கருத்து தெரிவித்த பாஜக ஐடி துறை தலைவர் அமித் மாள்வியா, போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது என்று குற்றம்சாட்டி இருந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந் நிலையில் போராட்டம் குறித்து அவதூறு பரப்புவதாக கூறியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஒரு கோடி இழப்பீடு தருமாறும் கூறி மால்வியாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் சார்பாக, நபிசா பானோ, பத்மா ஆகியோர் வழக்கறிஞரான மெகமுத் பிராச்சா என்பவர் மூலம் இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். விரைவில் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.