ஒரு எருமை மாட்டின் விலை ரூ.25 கோடி..!

--

ஹைதராபாத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்தார்(எருமை) திருவிழாவில் முர்ரா இன எருமை ரூ.25கோடிக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. ஷாஹென்ஷா என்று அழைக்கப்படும் இந்த எருமை அனைவரையும் கவர்ந்துள்ளது.

sadar

ஹைதராபாத்தில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் சர்தார் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. எருமைத் திருவிழா என்று அழைக்கப்படும் இந்த விழாவில் இந்தியா முழுவதும் இருந்து கொண்டுவரப்படும் எருமை மாடுகள் பங்கேற்கின்றன.

ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த எருமை மாடுகள் இந்த திருவிழாவில் அதிகமாகப் பங்கேற்கின்றன. இந்த ஆண்டு நடைபெறும் திருவிழாவில் ஷாஹென்ஷா என்ற எருமை அனைவரையும் கவர்ந்துள்ளது.

6 அடி உயரமும் 1500 கிலோ எடையும் கொண்ட கம்பீரமான நிற்கும் இந்த எருமை முர்ரா இனத்தைச் சேர்ந்தது. ஷாஹெஷாவை விற்பனைக்காக அழைத்து வந்திருக்கும் அதன் உரிமையாளர் அது சுமார் ரூ.25 கோடிக்கு விலைபோகும் என தெரிவித்துள்ளார்.