ஷாகித் அப்ரிடிக்கு பூம் பூம் என செல்லப் பெயர் சூட்டிய இந்திய வீரர் யார் தெரியுமா?

ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி தமக்கு பூம் பூம் என பெயர் வைத்த இந்திய வீரர் குறித்து டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

                                               ஷாகித் அப்ரிடி

அதிரடி ஆட்டக்காரர் என கிரிக்கெட் ரசிகர்களால் புகழப்படுபவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி.   இவருக்கு இன்னொரு செல்லப் பெயர் பூம் பூம் என்பதாகும்.   இவர் ஒவ்வொரு முறை கிரிக்கெட் மைதானத்தில் விளையாட செல்லும் போதும் இவரது ரசிகர்கள் பூம் பூம் அப்ரிடி என குரல் எழுப்புவதை பலர் கண்டதுண்டு.

               ரவி சாஸ்திரி

சாகித் அப்ரிடி சிக்சர் அடிப்பதில் மிகவும் புகழ் பெற்றவர்.  இதுவரை 398 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 351 சிக்சர்கள் அடித்துள்ளார்.  அதே போல 99 டி 20 போட்டிகளில் 73 சிக்சர்கள் அடித்துள்ளார்.   இதுவரை பலருக்கு இவருக்கு பூம் பூம் என செல்லப் பெயர்  எவ்வாறு வந்தது என்பது குறித்த சரியான தகவல் இல்லாமல் இருந்தது.

தற்போது அப்ரிடி தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.   அப்போது தல்ஹா அடிக் எனும் ரசிகர், “தங்களுக்கு பூம் பூம் என செல்லப் பெயர் வைத்தது யார்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

அதற்கு ஷாகித் அப்ரிடி, “எனக்கு பூம் பூம் என பெயர் வைத்தவர் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி” என பதில் அளித்துள்ளார்.