சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் சூரரைப் போற்று.

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக ஓடிடி இணையதளத்தில் வெளியானது. அதுபோல சூரரை போற்று படமும் ஓடிடி – யில் வெளிவருமா எனக் கேட்டதற்கு அதற்கு வாய்ப்பில்லை, தியேட்டர்களில் தான் முதலில் சூரரைப் போற்று வெளிவரும் என சூர்யா தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப் தற்போது முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் நடிப்பதற்காக நடிகர் ஷாஹித் கபூரை அணுகி உள்ளனர் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.