நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், கவுதம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படம் ‘ஜெர்சி’.

விமர்சகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது .

இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் நடித்து வருகிறார்.

ஏற்கெனவே தெலுங்கில் பெரும் வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’ திரைப்படத்தில் ஷாகித் கபூர் நடித்திருந்தது நினைவுகூரத்தக்கது.