இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கினார் ஷாருக்கான் மகள் சுகானா….!

பாலிவுட்டின் பாதுஷா ஷாருக்கானின் ஒரே மகள் சுகானா லண்டனில் படிக்கிறார். அவருக்கு சோஷியல் மீடியாவில் நெறைய ரசிகர்கள் உண்டு .

சுகானாவுக்கு நிறைய ஃபேன் பேஜ்களை உருவாக்கி அவரது படங்களை பகிர்ந்து வருகின்றனர் .

இந்நிலையில் சுஹானாவின் சொந்த இன்ஸ்டா கிராம் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது .

துவங்கி இதுவரை மொத்தமே 21 போஸ்ட்தான் போட்டு இருக்கிறார். முதல் போஸ்ட்டில் சகோதரர்கள் ஆப்ராம் கான், ஆர்யன் கானுடன் சுகானா இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. மற்ற படங்களிலும் அவரது தாய் மற்றும் நண்பர்களோடுதான் போஸ்கொடுத்து இருக்கிறார்.

இப்போதே அவரை 156 ஆயிரம் பேர் இன்ஸ்டாவில் பின் தொடர்கிறார்கள்..