’தளபதி 63’ல் நடிக்க ஷாருக்கான் கேட்ட சம்பளம் அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கும் கோலிவுட்…!

விஜய் – அட்லீ- ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டது.

தளபதி 63 டைட்டிலுடன் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

வில்லன் வேடத்திற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை நடிக்க வைக்க அட்லீ முயற்சித்து வருகிறார்.இந்த நிலையில், ஷாருக்கான் விஜய்க்கு வில்லனாக நடிக்க சம்மதித்திருப்பதாகவும், அவரது வேடம் க்ளைமாக்ஸின் போது 15 நிமிடங்கள் மட்டுமே வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த 15 நிமிடம் நடிப்பதற்காக ஷாருக்கான கேட்ட சம்பளத்தை அறிந்த ஒட்டு மொத்த கோலிவுட்டே அதிர்ச்சியடைந்திருக்கிறது.

‘தளபதி 63’ படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை சம்பளமாக ஷாருக்கான் கேட்டிருக்கிறாராம். 15 நிமிட காட்சிக்கு ரூ.20 கோடி சம்பளமாக வழங்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

கார்ட்டூன் கேலரி