‘கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஷகிலா                      –                  ரிச்சா சந்தா

லையாள கவர்ச்சி நடிகை ஷகீலாவின் கதையை மையமாக கொண்டு தயாரிக்கப்பட உள்ள  பாலிவுட் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல  மொழி திரைப்படங்களில் படங்களில் நடித்தார். இப்போது அவருடைய வாழ்க்கை வரலாற்றை பாவுட்டில் படமாக தயாரிக்க இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு வரும் ஆகஸ்டு மாதம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியில் தயாராகும்  இந்தப் படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்க உள்ளார். ஷகிலா கதாபாத்திரத்தில் ரிச்சா சந்தா என்ற பாலிவுட் நடிகை நடிக்கிறார்.  இந்தப் படத்தின் சில காட்சிகள் மலையாளத்திலும் படமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில், ஷகிலா 16 வயது இருக்கும் போது சினிமா உலகில்  அடியெடுத்து வைத்தது முதல் இன்றுவரை அவரது வாழ்க்கை வரலாறை மையமாக வைத்தே படத்தின் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. ஷகீலாவின் இளம் வயது முதல் கதை எடுத்துச் செல்வதால், பல்வேறு காலகட்டங்களில் அவரை திரையில் பிரதிபலிப்பது பெரிய சவாலாக இருக்கும் என இயக்குனர் சத்தா கூறி உள்ளார்.

இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் நடிகை ஷகீலா, மலையாள மசாலா படங்களில் நடித்தன் மூலம் பிரபலமானார். இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவரது படம் வெளியானால், மலையாளத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது படங்களே தோல்வியை சந்திக்கும் அளவில் பிரபலமானவர் ஷகீலா. தனது கவர்ச்சியால் மலையாள திரையுலகையே ஆட்டம் காண வைத்த ஷகிலாவின் வாழ்க்கை வரலாறை  தற்போது திரைப்படமாக எடுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.