குத்துச்சண்டை – ஒலிம்பிக் கனவை தக்கவைத்த இந்தியாவின் சாக்ஸி

அம்மான்: ஆசிய அளவிலான ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிப் போட்டியின் காலிறுதிக்குள் நுழைந்துள்ளார் இந்திய வீராங்கனை சாக்ஸி சவுத்ரி.

ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிப் போட்டிகள் தற்போது ஜோர்டான் நாட்டில் நடைபெற்று வருகின்றன. இத்தொடரில், அரையிறுதிக்கு முன்னேறினாலே, டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தகுதியைப் பெறலாம்.

இத்தொடரில் பெண்களுக்கான 57கிகி எடைப்பிரிவில், காலிறுதிக்குள் நுழைவதற்கான லீக் போட்டியில் இந்தியாவின் சாக்ஸி, தாய்லாந்தின் நிலவானை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், துவக்கம் முதலே திறமையாக செயல்பட்டு, 4-1 என்ற கணக்கில் போட்டியை வென்று, காலிறுதிக்குள் நுழைந்து, ஒலிம்பிக் பதக்க வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளார் வீராங்கனை சாக்ஸி.