காங்கிரசின் குரலை பிரதிபலிக்கும் ‘சக்தி’ மொபைல் செயலி அறிமுகம்!

காங்கிரஸ் கட்சியின் குரலை பிரதிபலிக்கும் வகையில் ‘சக்தி’ காங்கிரசின் குரல்’ என்ற பெயரில் புதிய மொபைல் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

நவீன தொழில்நுட்பம் மூலம்  உருவாக்கப்பட்டு உள்ள இந்த சக்தி செயலி வாயிலாக,  காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கள் வெகுஜன மக்களிடம் எளிதில் சென்றடையும் வகையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேவேளையில், மக்களும்  தங்களுடைய கருத்துக்களை நேரடியாக காங்கிரஸ் கட்சிக்கு தெரிய படுத்தும் வகையிலும் இந்த செயலி நவீன முறையில்  உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த சக்தி செயலி மூலம் மக்கள் தங்களுடைய கருத்துக்களை நேரடியாக காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தெரியப்படுத்தவும், அதுபோல, காங்கிரஸ் கட்சியின் கருத்துக்களை நேரடியாக பெறவும் முடியும்.­

காங்கிரஸ் கட்சியின் தகவல்களை பெறவும்,  பொதுமக்கள் தங்களது மேலான கருத்துக்களை கட்சியின் தலைமைக்கு எளிய முறையில் தெரியபடுத்தவும், முதலில் தங்களது மொபைன் எண்ணை, கீழே கொடுத்துள்ள விவரங்கள் அடிப்படையில், காங்கிரஸ் கட்சியின்  மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி இணைவது அவசியம்.

இந்த சக்தி செயலியில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்புபவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண்ணை, 8828843022 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்ய வேண்டும்.

உதாரணமாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த செயலியில் இணைய விரும்பினால், தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் குறிப்பிட்ட மொபைல் எண்ணை இணைத்து, தங்களது மொபைல் எண்ணில் இருந்து 8828843022  எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப வேண்டும்.

உதாரணமாக,  உங்கள் வாக்காளர் அட்டை எண்  xyz123456 ஆக இருந்தால், xyz 123456 9840072003 என்று டைப் செய்து 8828843022 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் (sms) செய்ய வேண்டும்.

தாங்கள் அனுப்பிய எஸ்எம்எஸ் உறுதி செய்யப்பட்டவுடன், காங்கிரஸ் கட்சியின் தகவல்கள் தங்களுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'SHAKTI' mobile app, CONGRESS, congress voice, reflecting Congress's voice, எஸ்எம்எஸ், காங்கிரசின் குரல், காங்கிரஸ், சக்தி, சக்தி காங்கிரசின் குரல், சக்தி மொபைல் செயலி, வாக்காளர் அடையாள அட்டை எண்
-=-