சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக நியமனம்!

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக மத்திய முன்னாள் நிதித்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

rbi

ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். உர்ஜித் பட்டேல் ராஜினாமா குறித்து அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். மத்திய அரசுடனான மோதல் காரணமாகவே உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.

உர்ஜித் பட்டேல் ராஜினாமாவை தொடர்ந்து இன்று சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எஞ்சிய மூன்றாண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சக்திகாந்த தாஸ் 1980ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற்றவர். அதன்பிறகு தமிழக அரசின் தொழில்துறை முதன்மை செயலாளராக சக்திகாந்த தாஸ் பணியாற்றியுள்ளார். மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சக்திகாந்த தாஸ் நிதித்துறை செயலாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கிக்கென கவர்னர் இருக்கும்போது, சுயச்சார்பு கூடுதல் இயக்குநராக ஆடிட்டர் குருமூர்த்தி நியமிக்கப்பட்டதால், மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மோதல் ஏற்பட்டு வருவதாக கருத்து கூறப்படுகிறது.