“சோர்வான மற்றும் விதியை நொந்த மனநிலை எதற்கும் உதவாது”

புதுடெல்லி: சோர்வான மற்றும் விதியை நொந்த மனநிலை என்பது எதற்கும் உதவாது என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, “இத்தகைய ஒரு சூழலில், பொருளாதார வளர்ச்சி என்பது அதிகபட்ச முக்கியத்துவம் வாய்ந்தது. நிதித்துறை பிரதிநிதிகள், வங்கிகள், வணிக நிறுவன தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கொள்கை வகுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்” என்றார்.

இந்தியாவின் நாணயக் கொள்கை கமிட்டியானது, வட்டி விகிதங்களை, இந்த 2019ம் ஆண்டுவரை, 110 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதன்மூலம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“நாட்டின் பொறுப்புவாய்ந்த நிலையிலிருக்கும் பலர், பொருளாதாரம் குறித்த எதிர்மறை எண்ணத்திலேயே இருக்கின்றனர். மனச்சோர்வு மற்றும் விதியை நொந்த மனநிலை வளர்ச்சிக்கு உதவாது” என்று சாடினார் சக்திகாந்த தாஸ்.