வித்யா பாலனின் ‘சகுந்தலா தேவி’ டிரைலர் ரிலீஸ்…..!

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது .

இதனால் திரையரங்குகள் மூடப்பட்டது எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது தெரியாமல் திண்டாடி வருகின்றனர்.

இதனால் பல்வேறு தயாரிப்பாளர்கள் தங்களின் படங்களை ஆன்லைன் ஓடிடி தளங்களில் வெளியிட முடிவு செய்து வருகின்றனர்.

சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி தளங்கள் ஒரு வரமாக அமைந்துள்ளன. திரையரங்குகள் கிடைக்காமல் தவித்த பல படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகவுள்ளன.

இந்நிலையில் அனு மேனன் இயக்கத்தில் வித்யா பாலன் நடிப்பில் உருவான ‘சகுந்தலா தேவி’ ஜூலை 31-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது .