இந்தூர்: டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள பந்து வீச்சாளர்களில், ஆஸ்திரேலிய வேகம் பேட் கம்மின்ஸை விஞ்சி, இந்தியாவின் முகமது ஷமி முதலிடம் பிடித்துள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிரான போட்டித் தொடரில் அவர் பிரமாதப்படுத்தி வருகிறார். வங்கதேசம் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் நிலையில், தற்போதுவரை ஷமி 3 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

இரண்டாவது இன்னிங்ஸ்களில் குறைந்தபட்சம் 25 விக்கெட்டுகளை சாய்த்த பவுலர்களின் ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. இதனடிப்படையில் ஷமி தற்போது முதலிடம் பிடித்துள்ளார்.

ஷமி பெற்றுள்ள புள்ளிகள் 31.9 மற்றும் கம்மின்ஸ் பெற்றுள்ள புள்ளிகள் 36.6. மேலும், டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்ட பந்துவீச்சாளர் பட்டியலில், முதல் 6 இடங்களுக்குள் இந்தியாவின் 4 பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முதலிடத்தில் முகமது ஷமி இருக்க, பும்ரா 4வது இடத்திலும், இஷாந்த் ஷர்மா 5வது இடத்திலும், ஜடேஜா 6வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.