சிஎஸ்கே, ஐபிஎல் உள்பட அனைத்து ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு… ஷேன் வாட்சன் பரபரப்பு தகவல்

சிஎஸ்கே, ஐபிஎல் உள்பட அனைத்து ஆட்டங்களில் இருந்தும் ஓய்வுபெறுவதாக பிரபல கிரிக்கெட்  ஷேன் வாட்சன் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனுபவ துவக்க ஆட்டக்காரரும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.  தொடர்ந்து ஒருநாள் போட்டி, ஐபிஎல் போன்ற சில போட்டிகளில் கவனம் செலுத்துவதாக கூறியிருந்தார்.
இதையடுத்து ஆஸ்திரேலியாவில், ஐபிஎல் போல நடக்கும் பிக் பாஷ் டி20 தொடரில்  பங்கேற்று வந்தார். ’ சிட்னி தண்டர்’ அணிக்கு 4 ஆண்டுக்கு முன்பாக கேப்டன் பொறுப்பு ஏற்ற அவர், அதிரடியாக விளையாடி வந்தார். தற்போது இந்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட விரும்புவதால் இந்த ஓய்வு முடிவை அவர் அறிவித்துள்ளார்.
தற்போது 39 வயதாகும் ஷேன் வாட்சன் 59 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வாட்சன், 3,731 ரன்கள் குவித்துள்ளார். 75 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டுதான்  சிஎஸ்கே அணிக்கு வந்தார். 2018 ஐபிஎல் இறுதி போட்டிடயல் சிறப்பாக ஆடிய ஷேன் வாட்சன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சதம் அடித்து சிஎஸ்கே ஐபிஎல் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

அதைத்தொடர்ந்து, சிஎஸ்கே அணியில் தொடரும் வாட்சனால்,  எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்க முடியாத நிலையே தொடர்ந்து வந்தது. இருந்தாலும்,  தோனி, அவர் மீது நம்பிக்கை வைத்து  நீடிக்க வைத்தார் கடந்த ஆண்டு (2019)  ஐபிஎல் தொடரின் பின் பாதியில் ஷேன் வாட்சன் தன் பார்முக்கு திரும்பி வேட்சன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 96 ரன்கள் அடித்து மிரட்டினார். அடுத்து இரண்டாவது தகுதி நீக்க போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். 2019 ஐபிஎல் இறுதிப் போட்டி 2019 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கூட சிஎஸ்கே அணியை கோப்பை வெல்ல வைக்க கடுமையாக முயன்றார். 59 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். எனினும், அந்தப் போட்டியில் சிஎஸ்கே 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமரேட்டில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சிஎஸ்கே அணி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.  ரெய்னா, ஹர்பஜன்சிங் போன்ற சில முக்கிய ஆட்டக்காரர்கள் இல்லாத நிலையில், சிஎஸ்கே அணி தடுமாறியதுடன், இடையிலேயே வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான, ஆஸ்திரேலிய வீரன் ஷேன் வாட்சன், சிஎஸ்கே மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.