4டி தொழில்நுட்பத்தில் வெளியான ரஜினியின் 2.0 படத்தின் டிரைலர் வெளியீடு (வீடியோ)

--

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் டிரைலர்  இன்று மதியம் வெளியானது.  பிரமாண்ட முறையில் எடுக்கப்பட்டுள்ள 2.0 படத்தின் டிரைலர்   பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பை தொடர்ந்து, 2.0படத்தின் டிரைலர்  படக்குழு ஒளிபரப்பியது.  இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், இயக்குநர் ஷங்கர் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். நடிகை எமி ஜாக்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் டிரைலர் வெளியிடப்பட்டது.

2.0 பிரமாண்ட டிரெய்லரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=jrETX2eDhL8

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது. இதுவரை இந்திய படங்களில் இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.