ஐ ஏ எஸ் பயிற்சி மைய உரிமையாளர் தற்கொலை

சென்னை

சென்னையில் அமைந்துள்ள சங்கர் ஐ ஏ எஸ் பயிற்சி மைய உரிமையாளர் சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

சென்னையில் மிகவும் புகழ் பெற்ற சங்கர் ஐ ஏ எஸ் அகாடமி என்னும் ஐஏஎஸ் பயிற்சி மையம் அண்ணா நகரில் அமைந்துள்ளது. இதன் நிறுவனரும் உரிமையாளருமான சங்கர் சென்னை மயிலாப்பூரில் வசித்து வருகிறார். இவர் திருமணமானவர். இரு குழந்தைகளின் தந்தையும் ஆவார்.

சமீப காலமாக இவருக்கும் இவர் மனைவிக்கும் இடையே குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுளது. அடிக்கடி இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை சங்கருக்கும் அவர் மனைவிக்கும் மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதை ஒட்டி சங்கர் நேற்று இரவு மது அருந்தி விட்டு இந்த பிரச்னை குறித்து மிகவும் யோசனை செய்துள்ளார்.

அதன் பிறகு மனம் விரக்தி அடைந்த் சங்கர் வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதிக்க மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர்.

தற்போது சங்கரின் உடல் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பப் பட்டுள்ளது. காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.