தேர்தலால் தள்ளி போகிறது கமல்ஹாசனின் இந்தியன்2 ஷூட்டிங்….!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப்படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், அதற்கு பின் படத்தின் ஷூட்டிங்கை நடத்தும் படி நடிகர் கமல் இயக்குனர் ஷங்கரிடம் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அவர் ஒப்புக்கொண்டதால், இப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் மே மாதம் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.