ஷங்கரின் அடுத்த படம்..

--

இயக்குநர் ஷங்கர் தற்போது, ரஜினி நடிக்கும் 2.0 படத்தை இயக்கி வருகிறார்.

பட இயக்கத்தோடு, தயாரிப்பிலும் ஷங்கர் ஈடுபட்டு வருவது தெரிந்ததே. ஏற்கனவே 23ம் புலிகேசி, காதல் உட்பட சில படங்களை தயாரித்திருக்கிறார். அடுத்ததாக 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க இருக்கிறார்.

இதை தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில், கடந்த 2006-ம் ஆண்டு வெளியானப் படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. வடிவேலு இரட்டை வேடத்தில் நடிக்க, , மனோரமா, நாசர், இளவரசு, தேஜ ஶ்ரீ, மோனிக்கா, ஶ்ரீமான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் பெரும் வெற்றி பெற்றது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக ஷங்கர் அறிவித்துள்ளார்.