சண்முகம், வில்சன்: ராஜ்யசபா தேர்தல் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

சென்னை:

மிழகத்தில் காலியாகும 6 ராஜ்யசபா  இடங்களுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தை 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் 24ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து  அந்த இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இன்று அதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

இந்த நிலையில், திமுக தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.

திமுக கூட்டணி சார்பில், கூட்டணி கட்சியான மதிமுகவுக்கு ஒரு இடம் வைகோவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மற்ற 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை அறிவித்து உள்ளது.

திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் பொதுச்செயலாளர் சண்முகம்,

வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோரது பெயரை திமுக தலைவைர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: dmk, Rajya Sabha Election, Shanmugam, wilson
-=-