புதுமுக இயக்குநர் ஸ்ரீஜர் படத்தில் இணையும் பாக்யராஜ் – சாந்தனு கூட்டணி…!

புதுமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கவுள்ள புதிய படத்தில் பாக்யராஜுடன் சாந்தனு இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை நடந்து முடிந்து, படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

திரைக்கதை ஸ்ரீஜர் எழுதியுள்ளார் . ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்ரவர்த்தி, எடிட்டராக ஜோமின் மேத்யூ, கலை இயக்குநராக நர்மதா வேணி, இசையமைப்பாளராக தரண் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.