லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .

இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்க சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் இப்படத்தில் உள்ளது .

இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா நடித்துள்ளார் .

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த ஞாயிற்று கிழமை வெகு விமரிசையாக நடத்தினர். இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் வரும் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்தார். .

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9-ம் தேதி வெளியீடாக இருந்த இந்தப் படம், இப்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பலரும் மார்ச் 22-ம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் எனத் தகவல்கள் பரப்பினார்கள். ஆனால், நேற்று வெளியாகவில்லை.

‘மாஸ்டர்’ பற்றிய எந்தவொரு அப்டேட்டுமே இல்லாததால், விஜய் ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர் .

விஜய் ரசிகர்களிடமிருந்து கேள்விகள் அதிகரிக்கவே, சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் “‘மாஸ்டர்’ குறித்த அப்டேட்ஸ் விரைவில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எனவே தயவு செய்து அமைதியாக இருக்கவும். இப்போதைக்கு, வீட்டில் பாதுகாப்பாக இருந்து கரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கடப்பதற்கான வழிகளைப் பார்ப்போம். அவசியமான தேவைகளுக்காக மட்டும் வெளியே செல்லுங்கள். உடல்நலம் தான் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.