நடிகை சாந்தி வில்லியம்ஸ் மகன் மாரடைப்பால் மரணம்…..!

சின்னத்திரை சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாந்தி வில்லயம்ஸ்.

இவரது கணவர் வில்லியம்ஸ் மலையாள சினிமாவில் பிரபல கேமரா மேன். மெட்டி ஒலி சீரியலில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் வில்லியம்ஸ் உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டாராம். அப்போது சாந்தி வில்லியம்ஸ் தனது நான்கு குழந்தைகளையும் வளர்க்க மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை சாந்தி வில்லியம்ஸின் மகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா ஒருபுறமிருக்க, மாரடைப்பு மறுபுறம் வாட்டி வதைக்கிறது. வயது வித்தியாசம் பாராமல் இந்த மாரடைப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருவதை காண முடிகிறது.