மும்பை:

விவசாய கடன் தள்ளுபடிக்கு ஆதரவு அளிக்காக பாஜக.வுக்கு சரத்பவாம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘
வங்கிகளில் மறுமுதலீடு செய்ய மத்திய அரசிடம் நிதி உள்ளது. ஆனால், மகாராஷ்டிரா பாஜக அரசு அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி திட்டத்த்துக்கு ஆதரவு அளிக்க முடியாது பாஜக கூறி வருகிறது. . மாநில அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தில் சிலருக்கு (மத்திய அமைச்சர்கள்) ஆர்வம் இல்லை. ஆனால், மத்திய அரசின் 80 ஆயிரம் கோடி ரூபாயை எப்படி வங்கிகளில் செலுத்துகின்றனர்.

கடன் தள்ளுபடி குறித்து முழு அறிக்கையை மாநில அரசு வெளியிட வேண்டும். ஒரு குடும்பத்ததிற்கு ஒரு நபர் தகுதி என்ற அடிப்படையிலான அறிக்கையை வெளியிட வேண்டும். நாட்டில் விவசாயம், தொழிற்சாலைகளின்வளர்ச்சி பாதித்துள்ளது. விவசாய உற்பத்தி மெதுவாக நடந்து வருகிறது. ஆனால், தற்போது வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத நபர்களால் உருவாகியுள்ள செயல்படாத சொத்துக்களின் பாதிப்பை சமாளிக்க ரூ. 80 ஆயிரம் கோடியை மத்திய அரசு வங்கிகளுக்கு வழங்குகிறது’’ என்றார்.

50 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 34 ஆயிரத்து 20 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மகாராஷ்டிரா அரசு கடந்தாண்டு ஜூனில் அறிவித்திருந்தது. ஆனால் இந்த தொகையை மத்திய அரசு ஏற்காது என்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஏற்கனவே அறிவித்துவிட்டார்.