கடந்த 4 ஆண்டுகளாக இந்திய விவசாய கவுன்சிலின் 63 ஆராய்ச்சி மையங்களுக்கு நிரந்தர இயக்குனர் நியமிக்கவில்லை: பிரதமர் மோடிக்கு சரத்பவார் கடிதம்

புதுடெல்லி:

இந்திய விவசாய கவுன்சிலின் 103 ஆராய்ச்சி மையங்களில், 63 மையங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக நிரந்தர இயக்குனர் நியமிக்கப்படவில்லை என, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்  தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.


முன்னள் மத்திய விவசாயத்துறை அமைச்சரான சரத்பவார் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “103 இந்திய விவசாய கவுன்சிலின் ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 63 மையங்களுக்கு கடந்த 2 முதல் 4 ஆண்டுகள் வரை இயக்குனர் நியமிக்கப்படவில்லை.

நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த டெல்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம், நாட்டின் உணவு தன்னிறைவை எட்ட உதவியாக இருக்கும் புகழ்பெற்ற புஷா ஆராய்ச்சி நிலையம் உட்பட 63 விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிரந்தரமாக இயக்குனர்கள் நியமிக்கப்படவில்லை.

அசாம் மற்றும் ஜார்கண்டில் புதிதாக விவசாய ஆராய்ச்சி நிலையம் அமைத்திருப்பதை பாராட்டுகின்றேன். அதற்காக பழமையான விவசாய ஆராய்ச்சி நிலையங்களை புறக்கணிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.