டெல்லி: ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவின் மகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பீகாரில் வரும் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. வேட்பாளர்களை அறிவித்து கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந் நிலையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி தலைவரான சரத் யாதவின் மகள் சுபாஷினி யாதவ் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். லோக் ஜன சக்தி தலைவரும், முன்னாள் எம்பியுமான காளி பாண்டேவும் காங்கிரசில் இணைந்தார்.
பீகார் தேர்தலை முன்னிட்டு இருவரும் காங்கிரசில் இணைந்துள்ளதாகவும், விரைவில் இருவரும் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுபாஷினி யாதவ் கூறியதாவது:
எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோருக்கு நான் நன்றி கூறுகிறேன். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தந்தையால் தேர்தலில் செயல்பட வில்லை. பீகார் மாநிலத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதே எனது பொறுப்பு என்று கூறினார்.